Saturday, October 10, 2015

வேறு பல மோசடிகள்


எடை இழப்பு கூற்றுக்கள்
அதிஸ்ட  மற்றும் சலுகைகள் மோசடிகள்
போலி காசோலை மோசடிகள்
மோசடிக்காரர் மோசடிகள்
மோசடியான வீட்டு வாடகைகள்
கடன் நிவாரண மோசடிகள்
முற்பண  கடன் சலுகைகள்
முதலீட்டு திட்டங்கள்
மின்னஞ்சல் ஊழல்கள்
இணையவழி Dating மோசடிகள்

 இந்த இணையத்தளங்களை பார்க்க

https://www.onguardonline.gov/ for more

https://www.consumer.ftc.gov/scam-alerts

https://esafety.gov.au/

(63)

Thursday, October 8, 2015

மின்னஞ்சல் கடவுச்சொல் திருடப்படுதல்

ரவி  கீழ்கண்ட  மின்னஞ்சலைப் பெற்றார்

From googleadmin@mygmail.com
To ravi@gmail.com
subject:கடவுச்சொல் சரிபார்ப்பு

Dear Ravi

my gmail  இன் இந்த செயற்பாடு செயலற்ற கணக்குகளை செயற்படுத்துவது ஆகும்.இந்த இணைப்பிற்கு சென்று பார்வையிட்டு உங்களது பயனர் சொல் மற்றும் கடவுச்சொல் இட்டு உங்களது மின்னஞ்சல் கணக்கினை பயன்படுத்தவும் உங்களது கடவுச்சொல்லை  சரிபார்த்த பின் உறுதிப்படுத்த இணைப்பை தொடர்ந்து கிளிக் செய்க

<a linkhere>
Best Regards
Mygamil Admin

ரவியின் சிந்தனை அவர் தனது மின்னஞ்சல் கணக்கினை இழக்கப்போகிறார் என்றவுடன் யோசிக்காமல் இந்த இணைப்பினை கிளிக் செய்ததுடன்
பயனர்பெயர் கடவுச்சொல்லை இட்டு நுழைந்தார்  சில நிமிடங்களில் அவரது கடவுச்சொல் சூறையாடப்பட்டது.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
1 இந்த மின்னஞ்சல் பதில் அனுப்ப தேவையில்லை
2.அதை யாரிடமும் அனுப்ப தேவையில்லை
3.இந்த விடயம் பற்றி  உயர்அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்

 (60)

வங்கியில் உங்கள் பணம் திருடப்படுதல்

கணேசன் என்பவர் ஒரு வைத்தியர் அவர் தேசிய சேமிப்பு வங்கியில் ஒரு கணக்கை வைத்துள்ளார். அவருக்கு கிடைத்த மின்னஞ்சல் ஒன்று பின்வருமாறிருந்தது

From:NatonalBankOnline@natonalbankonline.com
TO: Randima.Karunasena@mygmail.com
Subject: New Internet Banking Features
Dear Customer,

தேசிய வங்கி எப்போதும் வாடிக்கையாளர்கள் திருப்திக்காக புதிய சேவைகளை அறிமுகப்படுத்துகிறது. எங்களுடை ய இணைய வங்கியில் மேலும் பல வசதிகள் உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளன.இணைய வங்கி எனும் பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும் மற்றும் இப்பொழுது ஏற்றப்பட்ட வித்தியாசத்தை அறிந்து கொள்ளவும்
http://www.natonalbankonline.com/login.php

Best regards
National Bank Team

அவர் அந்த இணைப்பில் சென்றது மட்டுமல்லாமல் தனது பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் இட்டிருக்கிறார்.
என்ன உண்மையில் நடந்தது என்றால் ஒரு எழுத்து வேறு பட்டிருக்கும் அந்த வலைத்தளம் சரியாக அவரது வங்கி போன்ற தோற்றம் கொண்டதாகும் அவர் தனது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டிருக்கிறார். தவறான வலைத்தளத்தில் அவரது கடவுச்சொல்லை இட்டவுடன் ஒரு மணி நேரத்தில் அவரது பணம் களவாடப்பட்டது

நீங்கள் இந்த மாதிரி ஒரு மின்னஞ்சல் கிடைக்கும் போது

1.இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம்
2.அதை யாரிடமும் திருப்பி அனுப்ப வேண்டாம்
3.வங்கிக்கு இந்த தகவலை தெரியப்படுத்த வேண்டும்
4.இந்த விஷவயம் பற்றி அதிகாரிகள் தெரிவிக்க

(61)

Sunday, October 4, 2015

இணையத்தின் வரலாறு

இணையம் ஒவ்வொருவரது வாழ்விலும் ஒரு பகுதியாக மாறிவருகிறது. அதேவேளை இது இளைஞர்களிடையே தாக்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தினை உலகம் முழுவதும் பல பில்லியன் சாதனங்களில் இணைக்க இன்டர்நெட் புரோட்டோகால் தொகுதி (டிசிபி / ஐபி) பயன்படுத்தப்படுகிறது.

ஒன்றோடொன்றான கணினி வலைப்பின்னல்கள்,  தகவல் வளங்கள் மற்றும் சேவைகளின் விரிவான வீச்சாக இணையம் செல்கிறது.

மீயுரை ஆவணங்கள் மற்றும் உலகளாவிய வலைப்பயன்பாடுகள் மின்னணு மின்னஞ்சல் தொலைபேசியை செயல்படுத்தல் கோப்பு பகிர்வு , வலைப்பின்னல்களுக்கி்யிலான இணைப்புக்கள் பல தானாக முன்வந்து இணைந்துள்ள தன்னாட்சி வலைப்பின்னல்கள்  இணைய மத்திய ஆளுமை இல்லாமல் செயல்படுவதே இணையம் என்கின்ற உலகளாவிய வலைப்பின்னல் ஆகும்
இது மில்லியன் கணினிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இணையம் என்பது பலவலைப்பின்னல்களால் இணைக்கப்பட்டுள்ளது. இது தனியார் பொது கல்வி வணிக மற்றும் அரச வலைப்பின்னல்களை மில்லியன் கணக்கில் கொண்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் 40 வீதம் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது என 2015 ல் மதிப்பிட்டப்பட்டுள்ளது.மொபைல் தொழில்நுட்பங்கள் மற்றும் ”ஸ்மார்ட்” போன்கள் இணைய பயனர்களை ஒரு விரைவான கட்டத்தில் வளர செய்து 3.179.035.200 இணைய பயனர்கள் உலகளவில் காணப்படுகின்றனர்.

முதல் செய்தி  ஆர்ப்பநெற்  இல் கலிபோர்னியா பல்கலைக்கழக்கத்தில் ஆய்வகத்தில் இருந்து கணினிஅறிவியல் பேராசிரியர் ”லியோனார்ட் கிளைன்ராக்” என்பவரால் அனுப்பப்பட்டது. ”வின்ட்சாப் பாப்கான் ” மற்றும் ”டொனால்ட் சேவிஸ் ” மூலம் 1982 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இன்டர்நெட் புரொட்டோகோல் தொகுதியாக  TCP/IP அங்கீகரிக்கப்பட்டு பின்னர் வணிக இணைய சேவைகள் உலகளாவிய வலைப்பின்னல் ”டிம் பெர்னஸ் லீ ” என்பவரால் 1980 செயல்படுத்தப்பட்டது . 1990 களின் நடுப்பகுதியில் இருந்து, இண்டர்நெட் சமூகம், கலாச்சாரம், கல்வி மற்றும் வணிகத்தில் ஒரு புரட்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

சமூக ஒருங்கிணைப்பு, நடவடிக்கைகள், மற்றும் சமூக சங்கங்களில் புதிய வடிவங்களை உருவாக்கி ஒன்லைன் தகவல், வர்த்தகம், பொழுதுபோக்கு, மற்றும் சமூக வலைப்பின்னல் அதிக அளவில் கொண்டு, வளர தொடர்கிறது. முகப்புத்தகம்   போன்ற சமுக வலைத்தளங்கள் பழக தொடர்பு கொள்ள பதிய வழிமுறைகளை உருவாக்குகிறது. இத்தகைய தளங்களின் பயனாளர்கள் பொதுவான நலன்களை பெறவும் பக்கங்களுக்கு தகவல் பல்வேறு சேரக்கவும் மற்றும் பலர் உடன் இணைக்கவும் முடியும்.



Thursday, October 1, 2015

இணைய தொந்தரவு என்றால் என்ன?

தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையத்தில் சிறுவர்கள் வளர்ந்தவர்கள் நிறுவனங்கள் மற்றும் குழுக்களை நேரடியாக  அல்லது மறைமுகமான முறையில் கட்டுப்படுத்தி அச்சுறுத்தல் திரிபுபடுத்தி தீங்குசெய்யும் நோக்கில்  தொந்தரவு  செய்தலை இது குறிக்கும் .

இணைய  கொடுமைப்படுத்துதல் மற்றும் இணைய துன்புறுத்தல் என இந்த விடயம்  சில நேரங்களில் மாறி மாறி பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இணைய தொந்தரவு ஆனது  சிறார்களுக்கு மத்தியில் மின்னணு துன்புறுத்தல் அல்லது கொடுமைப்படுத்துதலாக பயன்படுத்தப்படுகிறது.அது வாய்மொழி துன்புறுத்தல் தொடர்புடையதாக இருக்கலாம். அல்லது உடல் தாக்குதல் வற்புறுத்தல் மிரட்டல் போன்றவையாகவும் இருக்கலாம்.

கொடுமைப்படுத்துதல் தடுக்க கடினம் என்றாலும் இணைய கொடுமைப்படுத்தலானது மிகவும் பாரதூரமானது. இது இணையத்தில் தொடங்கி இணையம் இல்லாத நிலை வரை நகரும்.பாடசாலைகளில் இருந்து வீடுவரை நகரக்கூடியது. மாணவர்கள் இணைய அச்சுறுத்தலினால் ஏற்படும் பிரச்சினைகளை தெரிந்து கொண்டு மற்றைய சமூகத்தினரை இப்பிரச்சினையில் இருந்து மீட்க வேண்டிய  ஒரு தேவை உள்ளது.

உங்களை  சுற்றி நடைபெறும் தொந்தரவுகளை தடுக்க முதல் படி  இணைய தொந்தரவுளைப் பற்றி அறிய வேண்டும்.

மின்னணு தொழில்நுட்பம் எமது தொடர்பாடல்களில் மேம்படுத்தவும் கல்விக்கும் மற்றும் எப்படி நாம் வேலை செய்யவேண்டும் என்றும் உதவியது. அதே நேரத்தில் இளைய சமுதாயதிற்க்கு ஒரு சவாலாகவும் காணப்படுகிறது.

எப்படி நாம் மின்னணு கல்வியறிவு,  ஒன்லைன் தனியுரிமை போன்றவற்றை இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கற்பிப்பது என்பது ஒரு சவாலாக இருக்கின்றது .