Thursday, October 8, 2015

வங்கியில் உங்கள் பணம் திருடப்படுதல்

கணேசன் என்பவர் ஒரு வைத்தியர் அவர் தேசிய சேமிப்பு வங்கியில் ஒரு கணக்கை வைத்துள்ளார். அவருக்கு கிடைத்த மின்னஞ்சல் ஒன்று பின்வருமாறிருந்தது

From:NatonalBankOnline@natonalbankonline.com
TO: Randima.Karunasena@mygmail.com
Subject: New Internet Banking Features
Dear Customer,

தேசிய வங்கி எப்போதும் வாடிக்கையாளர்கள் திருப்திக்காக புதிய சேவைகளை அறிமுகப்படுத்துகிறது. எங்களுடை ய இணைய வங்கியில் மேலும் பல வசதிகள் உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளன.இணைய வங்கி எனும் பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும் மற்றும் இப்பொழுது ஏற்றப்பட்ட வித்தியாசத்தை அறிந்து கொள்ளவும்
http://www.natonalbankonline.com/login.php

Best regards
National Bank Team

அவர் அந்த இணைப்பில் சென்றது மட்டுமல்லாமல் தனது பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் இட்டிருக்கிறார்.
என்ன உண்மையில் நடந்தது என்றால் ஒரு எழுத்து வேறு பட்டிருக்கும் அந்த வலைத்தளம் சரியாக அவரது வங்கி போன்ற தோற்றம் கொண்டதாகும் அவர் தனது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டிருக்கிறார். தவறான வலைத்தளத்தில் அவரது கடவுச்சொல்லை இட்டவுடன் ஒரு மணி நேரத்தில் அவரது பணம் களவாடப்பட்டது

நீங்கள் இந்த மாதிரி ஒரு மின்னஞ்சல் கிடைக்கும் போது

1.இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம்
2.அதை யாரிடமும் திருப்பி அனுப்ப வேண்டாம்
3.வங்கிக்கு இந்த தகவலை தெரியப்படுத்த வேண்டும்
4.இந்த விஷவயம் பற்றி அதிகாரிகள் தெரிவிக்க

(61)

No comments:

Post a Comment