Thursday, October 1, 2015

இணைய தொந்தரவு என்றால் என்ன?

தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையத்தில் சிறுவர்கள் வளர்ந்தவர்கள் நிறுவனங்கள் மற்றும் குழுக்களை நேரடியாக  அல்லது மறைமுகமான முறையில் கட்டுப்படுத்தி அச்சுறுத்தல் திரிபுபடுத்தி தீங்குசெய்யும் நோக்கில்  தொந்தரவு  செய்தலை இது குறிக்கும் .

இணைய  கொடுமைப்படுத்துதல் மற்றும் இணைய துன்புறுத்தல் என இந்த விடயம்  சில நேரங்களில் மாறி மாறி பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இணைய தொந்தரவு ஆனது  சிறார்களுக்கு மத்தியில் மின்னணு துன்புறுத்தல் அல்லது கொடுமைப்படுத்துதலாக பயன்படுத்தப்படுகிறது.அது வாய்மொழி துன்புறுத்தல் தொடர்புடையதாக இருக்கலாம். அல்லது உடல் தாக்குதல் வற்புறுத்தல் மிரட்டல் போன்றவையாகவும் இருக்கலாம்.

கொடுமைப்படுத்துதல் தடுக்க கடினம் என்றாலும் இணைய கொடுமைப்படுத்தலானது மிகவும் பாரதூரமானது. இது இணையத்தில் தொடங்கி இணையம் இல்லாத நிலை வரை நகரும்.பாடசாலைகளில் இருந்து வீடுவரை நகரக்கூடியது. மாணவர்கள் இணைய அச்சுறுத்தலினால் ஏற்படும் பிரச்சினைகளை தெரிந்து கொண்டு மற்றைய சமூகத்தினரை இப்பிரச்சினையில் இருந்து மீட்க வேண்டிய  ஒரு தேவை உள்ளது.

உங்களை  சுற்றி நடைபெறும் தொந்தரவுகளை தடுக்க முதல் படி  இணைய தொந்தரவுளைப் பற்றி அறிய வேண்டும்.

மின்னணு தொழில்நுட்பம் எமது தொடர்பாடல்களில் மேம்படுத்தவும் கல்விக்கும் மற்றும் எப்படி நாம் வேலை செய்யவேண்டும் என்றும் உதவியது. அதே நேரத்தில் இளைய சமுதாயதிற்க்கு ஒரு சவாலாகவும் காணப்படுகிறது.

எப்படி நாம் மின்னணு கல்வியறிவு,  ஒன்லைன் தனியுரிமை போன்றவற்றை இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கற்பிப்பது என்பது ஒரு சவாலாக இருக்கின்றது .






No comments:

Post a Comment