Sunday, October 4, 2015

இணையத்தின் வரலாறு

இணையம் ஒவ்வொருவரது வாழ்விலும் ஒரு பகுதியாக மாறிவருகிறது. அதேவேளை இது இளைஞர்களிடையே தாக்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தினை உலகம் முழுவதும் பல பில்லியன் சாதனங்களில் இணைக்க இன்டர்நெட் புரோட்டோகால் தொகுதி (டிசிபி / ஐபி) பயன்படுத்தப்படுகிறது.

ஒன்றோடொன்றான கணினி வலைப்பின்னல்கள்,  தகவல் வளங்கள் மற்றும் சேவைகளின் விரிவான வீச்சாக இணையம் செல்கிறது.

மீயுரை ஆவணங்கள் மற்றும் உலகளாவிய வலைப்பயன்பாடுகள் மின்னணு மின்னஞ்சல் தொலைபேசியை செயல்படுத்தல் கோப்பு பகிர்வு , வலைப்பின்னல்களுக்கி்யிலான இணைப்புக்கள் பல தானாக முன்வந்து இணைந்துள்ள தன்னாட்சி வலைப்பின்னல்கள்  இணைய மத்திய ஆளுமை இல்லாமல் செயல்படுவதே இணையம் என்கின்ற உலகளாவிய வலைப்பின்னல் ஆகும்
இது மில்லியன் கணினிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இணையம் என்பது பலவலைப்பின்னல்களால் இணைக்கப்பட்டுள்ளது. இது தனியார் பொது கல்வி வணிக மற்றும் அரச வலைப்பின்னல்களை மில்லியன் கணக்கில் கொண்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் 40 வீதம் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது என 2015 ல் மதிப்பிட்டப்பட்டுள்ளது.மொபைல் தொழில்நுட்பங்கள் மற்றும் ”ஸ்மார்ட்” போன்கள் இணைய பயனர்களை ஒரு விரைவான கட்டத்தில் வளர செய்து 3.179.035.200 இணைய பயனர்கள் உலகளவில் காணப்படுகின்றனர்.

முதல் செய்தி  ஆர்ப்பநெற்  இல் கலிபோர்னியா பல்கலைக்கழக்கத்தில் ஆய்வகத்தில் இருந்து கணினிஅறிவியல் பேராசிரியர் ”லியோனார்ட் கிளைன்ராக்” என்பவரால் அனுப்பப்பட்டது. ”வின்ட்சாப் பாப்கான் ” மற்றும் ”டொனால்ட் சேவிஸ் ” மூலம் 1982 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இன்டர்நெட் புரொட்டோகோல் தொகுதியாக  TCP/IP அங்கீகரிக்கப்பட்டு பின்னர் வணிக இணைய சேவைகள் உலகளாவிய வலைப்பின்னல் ”டிம் பெர்னஸ் லீ ” என்பவரால் 1980 செயல்படுத்தப்பட்டது . 1990 களின் நடுப்பகுதியில் இருந்து, இண்டர்நெட் சமூகம், கலாச்சாரம், கல்வி மற்றும் வணிகத்தில் ஒரு புரட்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

சமூக ஒருங்கிணைப்பு, நடவடிக்கைகள், மற்றும் சமூக சங்கங்களில் புதிய வடிவங்களை உருவாக்கி ஒன்லைன் தகவல், வர்த்தகம், பொழுதுபோக்கு, மற்றும் சமூக வலைப்பின்னல் அதிக அளவில் கொண்டு, வளர தொடர்கிறது. முகப்புத்தகம்   போன்ற சமுக வலைத்தளங்கள் பழக தொடர்பு கொள்ள பதிய வழிமுறைகளை உருவாக்குகிறது. இத்தகைய தளங்களின் பயனாளர்கள் பொதுவான நலன்களை பெறவும் பக்கங்களுக்கு தகவல் பல்வேறு சேரக்கவும் மற்றும் பலர் உடன் இணைக்கவும் முடியும்.



No comments:

Post a Comment